வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் பகுதியில் 40 கிலோ பூசணிக்காய் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார் என்று வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
மூளாய்ப் பகுதியில் உள்ள வயலில் பயிரிடப்பட்டிருந்த 40 கிலோ பூசணி திருட்டுப் போயுள்ளது என்று வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது .
முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற் கொண்ட வட்டுகோட்டைப் பொலிஸார் , மூளாய்ப் பகுதி யில் இருந்து 40 கிலோ பூசணிக்காயும் 1 கிலோ 70 ரூபா வீதம் விற்பனை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது .
அத்துடன் பூசணியைத் திருடி விற்பனை செய்த குற் றச்சாட்டில் 40 வயதான நபரை வட்டுக்கோட்டைப் பொலி ஸார் கைது செய்தனர் . சந்தேகநபருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
பிற செய்திகள்