மட்டு நகரில் டெங்கு தாக்கம் பரவாத வகையில் பரிசோதனை! (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலுள்ள பகுதிகளில் டெங்கு தாக்கம் பரவாத வகையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக்கின்; வழிகாட்டலில் வேலைத் திட்டங்கள் நாளாந்தம் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர் தலைமையிலான சுகாதார பிரிசோதகர்கள், அலுவலக டெங்கு பிரிவு உத்தியோகத்தர்கள், ஓட்டமாவடி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் வீடு வீடாக சென்று டெங்கு பரவும் இடங்களை இன்று பரிசோதனை செய்தனர்.

இதன்போது டெங்கு பரவும் வகையில் பொருட்களை வைத்திருந்த வீட்டு உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டதுடன் அப் பொருட்கள் ஓட்டமாவடி பிரதேச சபை உத்தியோகத்தர்களால் அகற்றப்பட்டது.

டெங்கு நோயின் தாக்கத்தை உணர்ந்து பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்படுவதுடன், வீடுகளில் நீர் தேங்கியிருக்கும் இடங்களை அகற்றி, டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுத்து, எமது சுற்றுப்புற சூழலை சுகாதார முறையில் பேணுமாறு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *