
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு பூராகவும் சுற்றுப்பயணங்கள் ஆரம்பித்துள்ள நிலையில், குறித்த விஜயங்களின் போது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மாவட்ட, தொகுதி அமைப்பாளர்களுக்கு உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி ரணிலை மொட்டு கட்சியினர் சூழ்ந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர்களும் உறுப்பினர்களும் ஜனாதிபதியை சுற்றியே செயற்படுவதால் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அரசியல் ரீதியாக மேலும் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜனாதிபதி அண்மையில் கதிர்காமம் சென்ற போது, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் புன்சத மஹகும்புர மற்றும் குழுவினர் இவ்வாறு பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டதுடன், களுத்துறை மாவட்டத்திலும் அவ்வாறான சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்