மேலும் இருவர் கைது

கொழும்பு,செப் 12

கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொரணை நகரசபை தலைவரின் வீட்டை தாக்கி சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 44 வயதுடைய இவர் ஹொரணை பிரதேசத்தை சேர்ந்தவர்.

அத்துடன், குருநாகல் உள்ளுராட்சி மன்ற தலைவரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கடை மீது தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்த மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *