60 வயது ஓய்வு தொடர்பான திருத்தங்கள் அடங்கிய பத்திரம் அனுப்பி வைப்பு

கொழும்பு, செப் 12

அரச உத்தியோகத்தர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்குவது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் அமைச்சரவை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய பத்திரத்தை கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று (12) அல்லது எதிர்வரும் அமைச்சரவையில் இது தொடர்பில் கலந்துரையாடப்படும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியினால் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் 65 வயதாக இருந்த அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள் தவிர 60 வயதை எட்டிய அரசு ஊழியர்கள் இந்த ஆண்டு டிசம்பர் 31 ம் திகதி ஓய்வு பெற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

இது தொடர்பான சுற்றறிக்கை அடுத்த இரண்டு வாரங்களில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்படும்.

இதனிடையே, ஓய்வு பெறும் வயதைக் குறைப்பதன் மூலம், இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் சுமார் 20,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *