
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் செய்தார்.
உயர்ஸ்தானிகராலயத்தில் அமைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் அவர் கையொப்பமிட்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
வார இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்று அனுதாபப் புத்தகத்தில் கையெழுத்திட்டிருந்தார்.
அத்தோடு, செப்டம்பர் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியாவிற்கு அவர் விஜயம் செய்வதாகவும் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.