பிரதமரை மாற்றுவது தொடர்பில் வெளியான புதிய தகவல்

பிரதமரை மாற்றுவதற்கு எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன மூத்த அரசியல்வாதி என்பதை தனது செயற்பாடுகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர்கள் அரசியலமைப்பு ரீதியாக நியமிக்கப்பட்டார்கள் என்றும் அவர்களின் வாகன செலவீனம் மிகவும் குறைவானது என்றும் அவர் கூறியுள்ளார்.

இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற தேனுக விதானகமகேவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *