பலாப்பழத்துடன் சேர்த்து சில உணவு பொருட்களையும் எடுத்துக்கொள்ள கூடாது என கூறப்படுகின்றது.
பலாப்பழம் சாப்பிட்டவுடன் சிலர் இரவில் பால் குடிப்பார்கள் ஆனால் அத்தகையவர்கள் இதுபோன்ற தவறை செய்யக்கூடாது, ஏனெனில் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்ககூடும். மேலும் இவை தோல் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
குறிப்பாக,பலாப்பழம் சாப்பிட்ட பிறகு தேன் உட்கொண்டால் உடலுக்கு பல தீமைகள் ஏற்படும். சுவையான தேன் உடலுக்கு பற்பல ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடியது. இதை சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.
தேன் மற்றும் பலாப்பழம் இரண்டுமே இனிப்புச்சுவை கொண்டவை. இரண்டையும் ஒன்றாக சேர்த்து உண்பதால் அது எதிர்விளைவை ஏற்படுத்தும்.
பப்பாளி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் பலாப்பழம் சாப்பிட்ட பிறகு அதை உட்கொண்டால், அது உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
எனவே பலாவை சுவைத்த பிறகு குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து பப்பாளியை சாப்பிடலாம்.
பலாவை காயாக சமைத்து சாப்பிடும்போது அதனுடன் வேறு எந்த காய்கறி வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் வெண்டைக்காயை மட்டும் சாப்பிட கூடாது.
ஏனெனில் பலாப்பழத்துடன் வெண்டைக்காயை உட்கொண்டால், சருமப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும், எடுத்துக்காட்டாக சருமத்தில் வெண் திட்டுகள் தோன்றலாம்.
பலாப்பழத்தை அளவுக்கு அதிகமாக உடகொண்டால் வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும்.
பலாப் பழ விதைகள் சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும் மலச்சிக்கல், கள்ளு குடிப்பவர்களுக்கு உண்டாவது போன்ற புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்போவது, வயிற்றுவலி போன்றவற்றை உண்டாக்கும்.
பலா பிஞ்சினை அதிகமாய் உண்பதால் செரியாமை, வயிற்று வலி போன்றவை ஏற்படுவதுடன் சொறி, சிரங்கு, கரப்பான், இருமல், இரைப்பு வாத நோய்கள் ஏற்படும்.
பிற செய்திகள்