மூதூர் – பாட்டாளிபுரம் பாமகள் கலவன் வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை விசேட கூட்டமொன்று இடம்பெற்றது.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாட்டாளிபுரம், நல்லூர் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வாழும் பழங்குடியின மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளான பாடசாலை மாணவர்களின் இடைவிலகல், இளம் வயது திருமணம், சிறுவர் துஷ்பிரயோகம்,போதைவஷ்து பாவனை தொடர்பாக அப்பிரதேசங்களைச் சேர்ந்த சமூக மட்ட பிரதிநிதிகளுடன் இவ்விசேட கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது இவ் பிரச்சினைகளுக்கான காரணங்கள், இதனை எதிர்காலத்தில் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மூதூர், பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் கூட்டத்தில் , மூதூர் பிரதேச செயலாளர், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர், சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்