காதலன் கண்டித்ததால் காதலி எடுத்த விபரீத முடிவு:யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் ஆசிரியர் ஒருவர் அவரது காதலன் கண்டித்ததினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்தவர் சிவகுமாரன் நிருத்திகா வயது 24 என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் உயிரிழந்த குறித்த ஆசிரியர், தனது காதலனுக்கு தெரியாமல் நண்பி ஒருவரின் திருமண வீட்டுக்கு சென்றுள்ளார்.

காதலன் பலதடவை தொலைபேசி அழைப்பு எடுத்திருந்த போதும் அவர் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த பெண் திருமண வீட்டுக்கு சென்ற சம்பவத்தினை தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த காதலன் ஒரு வாரத்துக்கு வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது என கண்டித்துள்ளார்.

இதனால் மனவிரக்தி அடைந்த காதலி இன்றைய தினம் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ஆசிரியரான பெண்ணின் உயிரிழப்பு ஆறு வருட காதலை முற்றுப்புள்ளிக்கு விட்டுச் சென்றுள்ளது.

சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *