
வவுனியா,செப் 13
வவுனியா, தாண்டிக்குளத்தில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வவுனியா – ஈஸ்வரிபுரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான, 44 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.