அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக மட்டுப்படுத்தும் சுற்றறிக்கை இன்று வெளியீடு!

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வுபெறும் வயதை 60ஆக மட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான சுற்றறிக்கை இன்று (புதன்கிழமை) வெளியிடப்படவுள்ளது.

சுற்றறிக்கை வெளியானதன் பின்னர், அரச ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக மட்டுப்படுத்தப்படும் என அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்தார்.

இதேவேளை, தமது சேவை தொடர்பான ஓய்வுபெறும் வயதை 60 ஆக மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவதாக அரச நிறுவனங்களின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்படியானால், நீர்ப்பாசன திணைக்களம், ரயில்வே திணைக்களம் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் செயலிழப்பு ஏற்படலாம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *