இரவு 10 மணிக்கு பின்னர் புதைகுழி போல் காட்சியளிக்கும் கொழும்பு – அமைச்சர் வெளியிட்ட தகவல்

இரவு பத்து மணிக்குப் பின்னர் கொழும்பு மாநகரம் புதைகுழி போல் இருப்பதாகவும் ஒன்றும் இருப்பதில்லை எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தெரிவித்துள்ளார்.

இரவு 10 மணிக்கு பின்னர் கொழும்பு நகரில் பணம் செலவழிக்க இடமில்லை எனவும், சுற்றுலா பயணிகளால் பணத்தை செலவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் பணத்தைச் செலவிடுவதற்கு பொழுதுபோக்கு நிறுவனங்கள் இடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

சுற்றுலாப் பயணிகள் தங்கள் பணத்தை தவறாமல் செலவிடும் வகையில் நிகழ்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *