
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வழங்கிய மாவட்ட ஒருங்கிணைப் புக்குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைமைப் பதவிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நியமனங்கள் இடம்பெற்ற பின்னர் அது தொடர்பான வழிகாட்டல் வழங்கப்படும் என்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலர் மாயாதுன்னே அறிவித்துள்ளார் .
இந்தக் கடிதம் மாவட்டச் செயலகங்களுக்கு நேற்று கிடைத்துள்ளது .
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டிருந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்களின் நியமனங்கள் இரத்துச்செய்யப்பட்டுள்ளமையால் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படும் வரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களை நடத்திச் செல்வதற்கான இயலுமை காணப்படுவதில்லை .
ஆகையால் ஜனாதிபதியால் புதிய மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப் புக்குழுத் தலைவர்கள் நியமிக்கப்பட்டதன் பிற்பாடு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்கு அவசியப்படும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறியத்தருகின்றேன் .
அத்தோடு இ புதிய தலைவர்கள் நியமிக் கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி செயல கத்தினால் வழங்கப்படும் புதிய ஆலோசனைகளின்படி அவர்களின் எரிபொருள் செலவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் – என்று குறிப்பிடப்பட்டுள்ளது .
பிற செய்திகள்