
தரம் குறைந்த மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்ய வேண்டாம் என சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பொறியியலாளர்கள் கோரியுள்ளனர்.
பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபனத்திடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தரம் குறைந்த மசகு எண்ணெய் இறக்குமதியால் பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தி 22 வீதத்தினாலும், எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் உற்பத்தி 80 வீதத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
சுமார் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் எடையுடைய மசகு எண்ணெய் கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மசகு எண்ணெய்யில் சல்பர் கூடுதலாக காணப்படுவதாகவும் இது தரம் குறைந்தது எனவும் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தரம் குறைந்த மசகு எண்ணெய் காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்