தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வரும் 51வது உலக மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் நோக்கில் 18 முன்மொழிவுகள் குறித்த தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட ஏழு நாடுகளால் இந்த வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது.