
400 கிலோ கஞ்சாவுடன் இந்தியர் ஐவர் படகு ஒன்றுடன் கற்பிட்டியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை கற்பிட்டியில் இறக்கிவிட்டு தப்பிச் செல்லும் நோக்கில் உட்புகுந்த தமிழகம் தூத்துக்குடியை சேர்ந்த ஐவரே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கஞ்சாவை கரைக்கு கொண்டு வர முயன்ற இலங்கை மீனவர்கள் இருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களும் சான்றுப் பொருட்களும் கற்பிட்டி பொலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
பிற செய்திகள்