கொழும்பு கோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த விரைவு ரயிலின் இயந்திரம் தீப்பிடித்து எரிந்தமையால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் வேயங்கொட ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த ரயில்களில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புத்தம் புதிய சிவப்பு நிற ரயில் பெட்டிகள் பொருத்தப்பட்டிருந்தன.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் இயந்திரத்தில் தீப்பிடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தீப்பிடித்த ரயிலின் இயந்திரத்தை மீண்டும் கொழும்புக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேவேளை, திருகோணமலைக்கான பயணத்தை தொடர்வதற்காக மாற்று இயந்திரம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்