
யாழ்ப்பாணம், செப். 14:
கிளிநொச்சி இரணைமடுவில் கடல்தொழில் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை தேசிய நீரியல் வழங்கல் அபிவிருத்தி அதிகாரசபையின் நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி நிலையத்திற்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கள விஜயம் மேற்கொண்டார்.
இது தொடர்பாக கடற்தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் ” இந்த நிலையங்களுக்கு விஜயம் செய்த அமைச்சர், இந்த நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்தார். மேலும், தற்சமயம் செயற்பாட்டில் உள்ள நன்னீர் பாசிவளர்ப்பு, நன்னீர் மீன் குஞ்சு இனப்பெருக்க நிலையங்களின் செயற்பாடுகளையும் அமைச்சர் பார்வையிட்டார். அப்போது, இந்த நிலையங்களில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.