கோத்­தாவால் வழங்­கப்­பட்ட மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழு இணைத்­த­லைமை பதவி இரத்து

கோத்­தா­ப­ய­வால் வழங்­கப்­பட்ட மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழு இணைத்­த­லைமை பதவி இரத்து

முன்­னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச வழங்­கிய மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக்­குழு மற்­றும் பிர­தேச ஒருங்­கி­ணைப்­புக்­குழு இணைத்­த­லை­மைப் பத­வி­கள் இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ளன. புதிய நிய­ம­னங்­கள் இடம்­பெற்ற பின்­னர் அது தொடர்­பான வழி­காட்­டல் வழங்­கப்­ப­டும் என்று பொது­நிர்­வாக உள்­நாட்­ட­லு­வல்­கள், மாகாண சபை­கள் மற்­றும் உள்­ளூ­ராட்சி அமைச்­சின் செய­லர் மாயா­துன்னே அறி­வித்­துள்­ளார்.

இந்­தக் கடி­தம் மாவட்­டச் செய­ல­கங்­க­ளுக்கு நேற்று கிடைத்­துள்­ளது.
அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:-

முன்­னாள் ஜனா­தி­ப­தி­யின் ஆட்­சிக்­கா­லத்­தில் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக்­கு­ழுத் தலை­வர்­கள் மற்­றும் பிர­தேச ஒருங்­கி­ணைப்­புக்­கு­ழுத் தலை­வர்­க­ளின் நிய­ம­னங்­கள் இரத்­துச் செய்­யப்­பட்­டுள்­ள­மை­யால் புதிய நிய­ம­னங்­கள் மேற்­கொள்­ளப்­ப­டும் வரை மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக்­குழு மற்­றும் பிர­தேச ஒருங்­கி­ணைப்­புக்­கு­ழுக் கூட்­டங்­களை நடத்­திச் செல்­வ­தற்­கான இய­லுமை காணப்­ப­டு­வ­தில்லை.

ஆகை­யால், ஜனா­தி­ப­தி­யால் புதிய மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக்­கு­ழுத் தலை­வர்­கள் மற்­றும் பிர­தேச ஒருங்­கி­ணைப்­புக்­குழுத் தலை­வர்­கள் நிய­மிக்­கப்­பட்­ட­தன் பிற்­பாடு மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக்­குழு மற்­றும் பிர­தேச ஒருங்­கி­ணைப்­புக்­குழுக் கூட்­டங்­களை நடத்­து­வ­தற்கு அவ­சி­யப்­ப­டும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மாறு அறி­யத்­த­ரு­கின்­றேன்.

அத்­தோடு, புதிய தலை­வர்­கள் நிய­மிக்­கப்­பட்­ட­தன் பின்­னர் ஜனா­தி­பதி செய­ல­கத்­தி­னால் வழங்­கப்­ப­டும் புதிய ஆலோ­ச­னை­க­ளின் படி, அவர்­க­ளின் எரி­பொ­ருள் செலவு உள்­ளிட்ட விட­யங்­கள் தொடர்­பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் – என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *