
இலங்கை ஒரு விவசாய நாடு. விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்பார்கள். ஆனால் இப்போது விவசாயிகளின் முதுகெலும்பினையே உடைத்து விட்டார்கள் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் செயலாளர் செ.தவநாயகம் தெரிவித்தார்.
இன்று யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விவசாயிகள் தங்கள் விவசாய முயற்சியிலிருந்து எந்தவொரு வருமானத்தினையும் பெறாமல் கடனாளியாகவே இருக்கின்றார்கள். இதற்கு காரணம் உற்பத்திச் செலவு.
உர வகை இல்லை, உழவு இயந்திரத்துக்கான செலவு அதிகம். எனவே விவசாயிகள் மிகவும் பொருளாதார வீழ்ச்சிக்கு உட்பட்டு இருக்கின்றார்கள்.
ஒரு ஏக்கர் உழுவதற்கு சுமார் 20 ஆயிரம் வாங்குகிறார்கள். உரம், உழவு இயந்திரம் என்பவற்றுக்கான செலவு அதிகமாக இருப்பதனால் விவசாயிகள் நட்டம் அடைகின்றார்கள்.
இந்தியாவில் இருந்து 65 ஆயிரம் மெட்ரிக் தொன் உரம் கொண்டு வந்தார்கள். யாழ்., கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களுக்கு எவ்வளவு உரத்தினை கொடுத்தார்கள்?.
இவர்களின் பிரச்சனைக்கான தீர்வு உள்ளூராட்சி திணைக்களத்தினூடாகவோ அல்லது யாழ் மாவட்டத்திலுள்ள அரச அமைப்புக்களாலோ எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. விவசாயிகள் கூடுதலாக சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.- என்றார்.
பிற செய்திகள்