
கிளிநொச்சி, செப். 14: கிளிநொச்சியில் நன்னீர் மீன் கருவாட்டு உற்பத்தியை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வரும் பெண்களின் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் கருவாடு பதனிடும் இயந்திரத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று வழங்கி வைத்தார் .
இரணைமடுவில் கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை தேசிய நீரியல் வழங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி நிலையத்திற்கு கள விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என நன்னீர் மீன் கருவாட்டு உற்பத்தியை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வரும் பெண்கள் கோரிக்கை முன்வைத்திருந்தனர். இவர்களுக்கு, சுமார் ஒரு இலட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் பெறுமதியான இயந்திரத்தை அமைச்சர் வழங்கினார்.