தேசிய பேரவையை அமைப்பது குறித்த பிரேரணை தொடர்பில் 20ஆம் திகதி விவாதம்

கொழும்பு, செப் 14

நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட நெருக்கடியான பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் தேசிய பேரவையை அமைப்பது தொடர்பான பிரேரணையை 20ஆம் திகதி செவ்வாய்கிழமை விவாதத்தின் பின்னர் ஏற்றுக்கொள்வதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று தீர்மானித்துள்ளது.

இந்த தேசிய பேரவை பாராளுமன்றத்தில் நிறுவப்பட உள்ளது. பாராளுமன்றத்தின் சமீபத்திய நிகழ்ச்சி நிரலில் தேசிய பேரவை அமைப்பதற்கான முன்மொழிவும் சேர்க்கப்பட்டுள்ளது இந்த தேசிய கவுன்சிலை நிறுவுவதன் நோக்கம் குறுகிய கால, மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை உருவாக்குவதற்கு வழிகாட்டுதல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால பொது திட்டங்களில் உடன்பாட்டை எட்டுவது ஆகும்.

பிரதமர், பாராளுமன்ற அவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியின் தலைமை அமைப்பாளர் மற்றும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்கள் ஆகியோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முப்பத்தைந்து பேருக்கு மேல் இந்த பேரவையில் உள்ளடக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *