
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்க்கின்றன.காலகாலமாக ஆட்சிக்கு மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுடைய எந்த ஒரு செயற்திட்டத்தினையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை என தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது அரசியல் கைதிகளின் விடுதலை காணாமல் போனவர்களுக்கான நீதி என்பது தொடர்பாக எந்தவொரு கருத்துக்களும் தெரிவிக்கவில்லை.வடக்கு,கிழக்கில் உள்ள காணிகள் அபகரிப்பு தொடர்பாகவும் எந்த தீர்வும் தரவில்லை.
கடந்த காலங்களில் இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறலில் இருந்து சர்வதேசத்தினை எப்படி முட்டாளாக்கியது என்று அனைவருக்கும் தெரியும்.ஐக்கிய நாடுகள் சபைகள் இலங்கை அரசாங்கத்தினுடைய எந்தக்கருத்துக்களையும் கவனத்தில் எடுக்க கூடாது .ஏனெனில் பாதிக்கப்பட்ட தரப்பினராக தமிழர் தரப்பு இருக்கின்ற காரணத்தினால் எமக்கான நீதிகள் தொடர்ந்து மறுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த அரசாங்கம் சர்வதேசத்தினை ஏமாற்றுகின்ற நடவடிக்கையினை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.
வடக்கு,கிழக்கினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் இந்த கூட்டத்தொடரில் ஒரு கருதத்தக்க ,ஒன்றாக ஒருமித்து செயற்பட வேண்டும் அத்துடன் புலம்பெயர் தேசங்களில் உள்ள எங்கள் இனம் சார்ந்து செயற்படும் அவர்களுடனான அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவசரமாக கூட்டத்தினை மேற்கொண்டு அந்த கூட்டத்தொடரில் ஒரு காரசாரமான முடிவுகளை எடுத்து இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படாது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலே இலங்கை நிறுத்தப்படுவதற்கு நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என கூறிக்கொள்கிறோம்.என்றார்.