
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய முன்வந்துள்ள அவுஸ்ரேலிய முதலீட்டாளர்களுடனான ஆரம்ப கலந்துரையாடலொன்று இன்று (14) இடம்பெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடு செய்வது தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து ஆராயும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி உள்ளிட்ட முதலீட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
தற்போதைய மின்சார நெருக்கடிக்குத் தீர்வாகவும் தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும்புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் புதிய முதலீடுகளை ஊக்குவிக்கவும் இலங்கை அரசு முன்னுரிமை அளித்துள்ளது.