பிரித்தானிய யுவதியின் அடிப்படை உரிமை மீறல் மனு தள்ளுபடி!

இலங்கையிலிருந்து நாடு கடத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யக் கோரி, பிரித்தானிய யுவதி தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அத்துடன் மனுதாரரான பிரித்தானிய யுவதிக்கு ஒரு இலட்சம் ரூபாய் வழக்கு கட்டணம் செலுத்துவதற்கும் உத்தரவிட்டே இவ்வாறு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அளுவிஹார, எஸ். துறை ராஜா, ஜனக் டி சில்வா ஆகியோரை உள்ளடக்கிய நீதியரசர்கள் குழாம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது.

காலி முகத்திடல் போராட்டத்துக்கு உதவி ஒத்தாசை வழங்கும் வகையில் செயற்பட்டதாக பிரித்தானிய பெண் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *