கிழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்திற்கு பாதயாத்திரையாக செல்லும் யாத்திரிகளின் நன்மை கருதி வாகரை பொலிசார் தாகசாந்தி வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மகதே மகிந்தவிஜயவர்த்தனவின் வழிகாட்டலில் இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மண்டுர் முருகன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பாத யாத்திரையானது மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி வழியாக வாழைச்சேனையை சென்றடைந்து வாகரை திருமலை வீதி வழியாக வாகரையை இன்று சென்றடைந்துள்ளது.இவ் பாத யாத்திரை குழுவினார் நாளை மாலை வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி முருகன் ஆலயத்தினை சென்றடையவுள்ளது.
கடந்த 3 வருடகாலமாக நாட்டில் ஏற்பட்ட கொரோனா நோய் தாக்கம் காரணமாக இவ்வாறான யாத்திரைகள் மேற்கொள்வது சுகாதார பிரிவினரினால் தடை செய்யப்பட்டிருந்தது.
இம்முறை அதிகளவான பக்தர்கள் அரோகர கோஷத்துடன் சிறுவர் முதல் முதியவர் வரை யாத்திரையில் பங்கு கொண்டுள்ளனர்.வெருகலம்பதி முருகன் ஆலயத்தின் கொடியேற்றம் கடந்த மாதம் 29 ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ந்து 18 தினங்கள் திருவிழா நடைபெற்று 16.09.2022 ஆம் திகதி தீர்தோற்சவம் நடைபெறவுள்ளது.

பிற செய்திகள்