
மஸ்கெலியா,செப் 14
மஸ்கெலியா பகுதியில் இருந்து கரவனெல்ல பகுதிக்கு வாகனம் ஒன்றில் அனுமதி பத்திரம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 10 ஆடுகள் மீட்கப்பட்டுள்ளன.
மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை தொடர்ந்து பொலிஸார் அந்த வாகனத்தை மடக்கி பிடித்தனர்.
குறித்த ஆடுகள் அனுமதி பத்திரம் இன்றி கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்த மஸ்கெலியா பொலிசார் சந்தேக நபர்களை கைது செய்ததோடு வாகனத்தையும் கைப்பற்றினர்.