
சீதுவை,செப் 14
சீதுவை பகுதியின் விஹாரை ஒன்றிலிருந்து, விஹாராதிபதி தேரர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
விஹாரையின் விஹாராதிபதி தங்குமிடத்தில் கட்டில் ஒன்றின் மேல் முகம், வாய்ப் பகுதி துணியினால் கட்டப்பட்டிருந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
வேத்தேவ, ரந்தொலுவ ஸ்ரீ நத்தாராம விஹாரையின் விஹாராதிபதி நெடகமுவே மஹானாம தேரரே ( 55) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த தேரர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விஹாரையிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த விஹாரையில், 18 வயதான இளம் பிக்கு ஒருவரும் தங்கியிருந்துள்ளதுடன், தற்போது அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லாத நிலையில், பொலிஸாரின் கவனம் குறித்த பிக்கு மீது திரும்பியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.