வவுனியா, வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டையடுத்து வவுனியா பிரதேச செயலகத்தால் குருதி கொடை வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (14) இந்நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா வைத்தியசாலையில் சில வகை குருதிகளுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது. இந்நிலையில் இவ் வகையான குருதிகளை வைத்தியசாலைக்கு வழங்கும் செயற்பாட்டை வவுனியா பிரதேச செயலகம் முன்னெடுத்திருந்தது.
இவ் இரத்ததான நிகழ்வில் குறித்த பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், இளைஞர்கள் எனப் பலரும் தாமாக முன் வந்து குருதியினை வழங்கியிருந்தனர்.
இதன்போது குருதிக் கொடையாளர்களுக்கு வெளிச்சம் அறக்கட்டளையின் நிதி உதவியில் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.






பிற செய்திகள்
- மூலப்பொருள் பற்றாக்குறை; சுமார் 10 ஆயிரம் ஹோட்டல்களுக்கு பூட்டு!
- ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தும் நான்கு சர்வதேச அமைப்புகள்!
- இலங்கையில் தனி நபரின் வாழ்க்கைச் செலவு! அதிர்ச்சியளிக்கும் அரசின் புள்ளிவிபரம்!
- இலங்கையில் தேங்காய்க்கும் விரைவில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
- முக்கிய தொழிலதிபர்களின் வீடுகள் மக்களால் எரிக்கப்படும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
- சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka