யாழில் ஹிந்தி மொழிப் புலமையாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

இலங்கைக்கான  இந்தியத் துணைத் தூதரகம்,ன மற்றும் யாழ். இந்திய உதவித்துணைத்தூதரகத்தின் எற்பாட்டில் 1949 ஆம் ஆண்டு இந்தியாவின் உத்தியோகபூர்வ மொழியாகயுள்ள  ஹிந்தி மொழியினை   நினைவுகூரும் வகையில் ஹிந்திதிவாஸ் மொழிப்புலமையாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ். மருதடி வீதியில் உள்ள யாழ் இந்திய உதவித்துணைத்தூதரகத்தில் இன்று மாலை இடம்பெற்றது.

யாழ். இந்திய உதவித் துணைத்தூதரகத்தின் பதில் தூதுவர் வி.ராம் மகேஷ்  கலந்துகொண்டு முதற்கட்டமாக வடமாகாணத்தில் அரச நிர்வாகத்தில் பதவி நிலை உள்ள  39 அதிகாரிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து நிர்வாகத்தில் பதவி நிலை அதிகாரிகள்  தாம் கற்ற மொழிப்புலமையிலான ஹிந்தி கவிதைகள், பேச்சுக்கள் மற்றும் பாடல்களை அனுபவரீதியாக வெளிப்படுத்தினர்.

இதில் யாழ். இந்திய உதவித்தூதரகத்தின் ஹிந்திதிவாஸ் மொழிக்கான போதனாயசிரியர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள்,அலுவலகர்கள் எனப் பலரும் பங்குபற்றினார்கள்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *