போரில் இறந்தவர்களை அமைதியாக நினைகூற எந்த தடையும் இல்லை- பிரதமர் உறுதி!

போரில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் . -இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார் . இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது :

கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல் நிகழ்வுகள் வரும் போது இன ரீதியான , மொழி ரீதியான , மத ரீதியான கருத்து மோதல்கள் வெடிக்கின்றன . அந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார் .

நினைவேந்தல்களை இறந்தவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அமைதியாகக் கடைப் பிடிக்கவேண்டும் . அந்த நிகழ்வுகள் அரசி யல் நிகழ்ச்சி நிரல் உள்ளதாகவோ அல் லது இன ரீதியான கிளர்ச்சியைத் தூண்டு பவையாகவோ இருக்கக்கூடாது . அதேவேளை , தடைசெய்யப்பட்ட அமைப் புக்களின் கொடிகளைப்பயன்படுத்தியோ அல்லது அந்த அமைப்புக்களுக்கு புக ழாரம் சூட்டியோ நினைவேந்தல் நிகழ்வு களைக் கடைப்பிடிக்கமுடியாது . அவற்றை மீறினால் சட்டங்களுக்கமை வாகவே நடவடிக்கை எடுக்கவேண்டி வரும் – என்றார் .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *