வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு காலாவதியான பைஸர் தடுப்பூசிகளே ஏற்றப்படுகின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது . எனினும் , சுகாதார அமைச்சின் தடுப்பூசி தொடர்பான ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே தடுப்பூசி ஏற்றப்படுகின்றது என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
தற்போது வடமாகாணப் பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவருகின்றன . இதன்போது 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் காலாவதியான தடுப்பூசிகளே மாணவர்களுக்கு ஏற்றப்படுகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் காலாவதியான இந்தத் தடுப் பூசிகளை 2022 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வரையில் ஏற்றுவதற்கு அதிகாரி களால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட் டுள்ளன . அதற்கமைய கடந்த 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இந் தத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது . அடுத்த கட்டமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு இந்தத் தடுப் பூசிகள் ஏற்றப்படவுள்ளன என்றும் தெரியவருகின்றது . வடக்கின் ஏனைய பாட சாலை மாணவர்களுக்கும் இந்தத் தடுப்பூசிகளே ஏற்றப்படவுள்ளன . இது தொடர்பாக மாணவர்களுக்கோ , பெற்றோருக்கோ சுகாதாரத் துறையால் எந்த விளக்கமும் இதுவரை வழங்கப்படவில்லை .
இதுதொடர்பாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத் துவர் ஆ.கேதீஸ்வரனிடம் கேட்டபோது ;
இந்தத் தடுப்பூசியே நாடு முழுவதும் ஏற்றப்படுகின்றது . உலக சுகாதார நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சின் தடுப்பூசி தொடர்பான ஆலோசனைக் குழுவின் பரிந்துரையுடனேயே காலாவதியான தடுப்பூசியை பயன்படுத்தும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது . அதில் தடுப்பூசிகளை 2022 ஒக்ரோபர் 31 ஆம் திகதிவரை பாவ னைக்குட்படுத்தலாம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். காலாவதியாகி சில மாதங்கள் கடந்த பின்னரான தடுப்பூசிகள் செலுத்தப்படுவதால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதா ? என்று அவரிடம் கேட்டபோது . ‘ நாடு முழுவதும் இந்தத் தடுப்பூசியே செலுத்தப்படுகின்றது .
இது தொடர்பான மேலதிக விவரங்களை நீங்கள் சுகாதார அமைச்சிடம்தான் கேட்கவேண்டும் . என்று அவர் மழுப்பலாகப் பதிலளித்தார் . அதேவேளை . ஏனைய மாகாணங்களில் சிலவற்றில் இந்தத் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும் , அதி காரிகளின் எதிர்ப்பால் அந்த நடவ டிக்கை கைவிடப்பட்டது என்று அறிய முடிகின்றது .
பிற செய்திகள்