
பிரித்தானிய மகாராணியார் மறைந்த அன்று பக்கிங்காம் அரண்மனை மீது இரட்டை வானவில் உருவாகிய விடயம் மக்களை நெகிழவைத்தது.
இந்நிலையில், மீண்டும் ராஜகுடும்ப ரசிகர்களை நெகிழச் செய்யும் இயற்கை அதிசயம் ஒன்று நடைபெற்றது.
தற்போதைய மன்னரான சார்லஸ் அந்த பெட்டியின் பின்னால் நடந்துவருவோரை முன் நடத்திச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, திடீரென வானிலிருந்து ஒரு ஒளிக்கற்றை சரியாக மகாராணியாரின் பூதவுடல் மீது விழுந்தது.
அந்த காட்சியைக் கண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய், இது தெய்வீக செயல் என நெகிழ்கிறார்கள்.
இரண்டாவது எலிசபெத் மகாரணியின் இறுதிச்சடங்குகள் எதிர்வரும் 19 ஆம் திகதி லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் தேவாலயத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக ஏற்கவே அவரது உடல் ஸ்கொட்லாந்தில் இருந்து லண்டனுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
உடல் மக்களின் அஞ்சலிக்காக தற்போது பகிங்ஹாம் மாளிகையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[embedded content]