திருகோணமலை – உப்புவெளி காவல்துறை பிரிவிலுள்ள 05 ஆம் கட்டை பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த நபரொருவரை திருகோணமலை பிராந்திய போதை ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 5 கிராம் 910 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த சந்தேக நபர் திருகோணமலை – சர்தாபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை ஏற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.