
பேலியகொடை, புகையிரத வீதி – குருகுல வித்தியாலயத்திற்கு அருகாமையில் நேற்றிரவு ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே, துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
குறிப்பாக,காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காண பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்