காலாவதியான கண்ணீர் புகை குண்டு வீச்சு! பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு

அண்மைக்காலங்களில் நடந்த போராட்டங்களில் பொலிஸாரினால் பயன்படுத்தப்பட்ட கண்ணீர் புகை குண்டுகளின் காலாவதி திகதிகள் தொடர்பான தகவல்கள் குறித்து, ஊடகவியலாளரொருவர் செய்த முறைப்பாட்டை விசாரித்த தகவல் அறியும் உரிமை ஆணையகம், 10 நாட்களுக்குள் தகவல்களை தர வேண்டும் என பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணைக்குழுவில், ஊடகவியலாளரொருவர் முன்வைத்த முறைப்பாடு நேற்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த விசாரணையின் போது ஓய்வுபெற்ற நீதிபதி ரோஹினி வல்கம, சட்டத்தரணிகளான கிஷாலி பின்டோ ஜயவர்தன மற்றும் ஜகத் லியனாராச்சி ஆகிய மூன்று ஆணையாளர்களை உள்ளடக்கிய ஆணைக்குழு, உயிருக்கு ஆபத்து மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் குறித்து ஊடகவியலாளர் கோரிய தகவல்களை பொலிஸார் வழங்காமை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளது.

முதல் விசாரணையில் பங்கேற்ற பொலிஸ் படைத் தலைமையகம் மற்றும் பொலிஸ் சட்டப் பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆணையத்திடம், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறான தரவுகளை அளிப்பதால் இதுபோன்ற தகவல்கள் தங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

நேற்றைய விசாரணையின் போது, திட்டமிடப்பட்ட அடுத்த விசாரணையில் கண்ணீர் புகை குண்டுகளின் கொள்முதல் மற்றும் காலாவதி திகதிகள் தொடர்பான விபரங்களை பொலிஸார் வழங்கியுள்ளனர்.

இதன்போது ஆணைக்குழுவிற்கு தகவல் வழங்கிய படி, உண்மைக்கு புறம்பானவை என்றும், முழுமையற்றவை என்றும் சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர், உண்மையான தகவல்களை வழங்க பொலிஸாருக்கு அறிவிக்குமாறு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஆணைக்குழு வினவியபோது, ​​அவை ஒரே இடத்தில் வைக்கப்படாததால் முழு விபரங்களையும் பல்வேறு பிரிவுகளில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக பொலிஸ் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பல்வேறு பிரிவுகளின் பிரதிநிதிகள் ஆணைக்குழுவின் கட்டளைகளுக்கு இணங்கவில்லை என்றால், பொலிஸ் மா அதிபரை ஒட்டுமொத்த தலைவராக பார்க்க முடியுமா என ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் விண்ணப்பம் தொடர்பான முழு விவரங்களை பத்து நாட்களுக்குள் வழங்க பொலிஸார் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அடுத்த விசாரணை அக்டோபர் 6ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *