இலங்கையை அண்மித்த கடலில் 3 எரிபொருள் கப் பல்களுக்கு 33 இலட்சம் டொலர் தாமதக் கட்டணங் களை செலுத்த வேண்டி யுள்ளதாகவும் , இது ஊழல் மோசடியுடன் தொடர்புபட்ட தாக இருக்கலாம் என்றும் ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார் .
கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன் றில் அவர் இதனை தெரிவித்துள்ளார் . அதன்போது அவர் மேலும்தெரிவித்துள்ளதாவது ,
நாட்டில் 50 வீத எரிபொரு ளைக் கூட விநியோகிக்க முடியாது இருக்கும் நேரத்தில் இராஜாங்க அமைச்சரவையை நியமித்துள்ளனர் .
போராட்டத்தின் ஊடாக பிரதமராகி ஜனா திபதியான ரணில் விக்கிரமசி ங்க திருடர்களை பிடிக்கப் போவதில்லை . திருட்டை நிறுத்தப் போவதும் இல்லை . இலங்கைக்கு அருகில் எரிபொ ருள் கப்பல்கள் நாட் கணக்கில் நிற்கின்றன . அவற்றுக்கு தினமும் தாமதக் கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது .
தரகுப் பணத்திற்காக நடக்கலாம் இந்நிலையில் தற்போது 14 நாட்களாக ஒரு கப்பலுக்கும் , 7 நாட்களாக இன்னுமொரு கப்பலுக்கும் தினமொன்றுக்காக 33,000 டொலர்களை தாமதக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது . மேலுமொரு கப்பல் வரவுள்ளது .
இன்னும் இந்த தாமதக் கட்டணங்களும் செலுத்தப்படவில்லை . இப்போது வலுச் சக்திக்காக 3 அமைச்சர்கள் இருக்கின் றனர் . இதுவும் புதியவொரு மோசடியே . தாமதக் கட்டணம் மட்டுமன்றி விநியோக கட்டணமும் செலுத்த வேண்டியுள்ளது என்றார்.
பிற செய்திகள்