சீதுவ – வேத்தேவ பகுதியிலுள்ள விகாரையின் விகாராதிபதி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த விகாரையில் இருந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இன்று அதிகாலை துபாய் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
18 வயதான குறித்த பிக்கு தற்போது சீதுவ காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்வது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
பிற செய்திகள்