இலங்கைக்கு எதிரான சர்வதேச சதியை இணைந்து முறியடிப்போம்- விமல் அறைகூவல்!

ஐ .நா . மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் நிபந்தனையின்றி கண்டிக்க வேண்டும் என்றும் அதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார் .

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ,

சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் , இலங்கை பாதுகாப்புப் படைத்தலைவர்களுக்கு எதிரான போர்க்குற்றச் சாட்டுகளை விசாரிக்க சர்வதேச அதிகார வரம்பைப் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது .

இலங்கை அரசாங்கத்தி னால் நிராகரிக்கப்பட்ட 46/1 தீர் மானத்தின் மூலம் நிறுவப்பட்ட போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் சாட்சியங்களை தாக்கல் செய்வதற்கான சர்வதேச பொறிமுறையும் அதற்காக பயன்படுத்தப்படும் என்றும் உயர்ஸ்தானிகர் குறிப்பிடுகிறார்.

இலங்கையின் இராணுவத் தலைவர்களுக்கு எதிராக சர்வதேச அதிகார வரம்பைப் பிரயோகித்து வழக்குத்தொடரும் நாடுகளின் குற்றச்சாட்டுக்களும் சாட்சியங்களும் உத்தியோகபூர்வமாக வழங்கப்படுவதுடன் அவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத் துக்கும் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆனால் , மாநாட்டில் பங்கேற்கும் இலங்கைப் பிரதிநிதிகள் அதற்கு எதிரான உண்மைக ளைத் தெரிவிக்கவில்லை . பொருளாதாரக் குற்றச் செயல் கள் தொடர்பான குற்றச்சாட் டுக்கள் தொடர்பில் பதிலளிக்க வேண்டிய சில கடப்பாடுகள் இருந்த போதிலும் உயர்ஸ்தானிகர் இம்முறை அறிக்கையின் பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை .

போர்வீரர்கள் குற்றமற்றவர்கள் என்ற உண்மை களை கூறுவதற்கு விசேட சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்படவில்லை.

2015 ஆம் ஆண்டு முதல் சர்வதேச மனித உரிமைகள் ஆணையாளர்கள் போர்க் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இலங்கை பாதுகாப்புப் படையினரின் குற்றமற்றவர்கள் என்பது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை .

குறிப்பாக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப் பட்ட 5 போர்க்குற்ற நிபுணர் களால் தயாரிக்கப்பட்ட 6 அறிக்கைகள் இலங்கை பாதுகாப்பு படையினர் ஒரு அமைப்பாக போர்க்குற்றம் செய்யவில்லை என்பதற்கான உண்மை மற்றும் சட்ட ஆதாரங்களை தாக்கல் செய்துள்ள நிலையில் , அவ் வாறு செய்யாமல் இருப்பதற்கு சாக்குபோக்கு சொல்ல முடியாது .

மேலும் , 51 வது அமர்வில் கலந்து கொண்ட இந்திய அரசின் நிரந்தரப் பிரதிநிதி , தமிழ் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசிடம் பலமாகச் செல்வாக்குச் செலுத்தியுள்ளார் .

30 / 1 மற்றும் 46/1 தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது டன் , இம்முறை வெளிவிவகார அமைச்சர் அதனை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் . இவ்வாறானதொரு நிலையில் இலங்கைக்கு எதிராக 50/1 தீர்மானம் முன்வைக்கப்படுமாயின் அதில் செல்வாக்கு செலுத்தவே இந்தி யப் பிரதிநிதி அந்தக் கருத்தை வெளியிட்டார் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது .

அந்த வகையில் , ஒரு உறுப்பு நாட்டின் . அரசியலமைப்புத் திருத்தத்தை ஒற்றை நாடாகவோ அல்லது தீர்மானத்திற்கு வெளியே உள்ள பிரேரணையின்படியோ செல் வாக்கு செலுத்த எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை . இது வியன்னாமாநாடு மற்றும் மனித உரிமைகள் மாநாட்டின் அதிகாரத்தை விட அதிகமாக உள்ளது .

எனவே , இந்த மாநாட்டில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மேற்கூ றிய இரண்டு செயற்பாடுகளும் இலங்கை அரசாங்கம் , எதிர்க்கட்சி கள் உட்பட அனைத்து தரப்பின ராலும் நிபந்தனையின்றி கண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *