கபுடு காக்கா என்பதை போன்று வாகனங்களில் ஒலி எழுப்பிய சம்பவங்கள் தொடர் பில் வாகன சாரதிகள் சிலருக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்டிருந்த வழக்குகள் நீதிமன்றத் தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன .
போராட்டக் காலத்தில் வீதிகளில் வாகனங்களில் கபுடு காக்கா என்பதை போன்று ஒலி எழுப்பிய நிலையில் , கொழும் பில் சில இடங்களில் அதனு டன் தொடர்புடைய வாகன சாரதிகளுக்கு எதிராக பொலிஸார் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர் .
குறித்த வழக்குகள் நேற்று புதன்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆராயப்பட்ட போதே நீதிமன்றம் அந்த வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , குறித்த வழக்குகளை தொடர்ந்த பொலிஸார் மீது அதிருப்திகளை முன்வைத்ததுடன் , உயர் அதிகா ரிகள் சட்டப்பூர்வ உத்தரவுகளை மத்திரம் செயற்படுத்துமாறு நீதவான் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராகவே கபுடு காக்கா என்று போராட்டக் காலத்தில் தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
பிற செய்திகள்