‘வெந்து தணிந்தது காடு’ – நடிகர் சிம்பு நெகிழ்ச்சியில்!

கொளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ளது.

ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வெந்து தணிந்தது காடு இப்படங்களின் வரவேற்பை தொடர்ந்து ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் இன்று தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் இதனை விழாக்கோலமாக கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: ஃபயர் புஷ்பாவாக மாறிய கோவை சரளா வெந்து தணிந்தது காடு இதையடுத்து, ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பேசிய நடிகர் சிம்பு ”எல்லோரும் மனசார கூல் சுரேஷுக்கு நன்றி சொல்லிதான் ஆகவேண்டும்.

அவர் வேற லெவல். படத்துக்கு அவர் தனி புரொமோஷன் செய்துள்ளார். நன்றி கூல் சுரேஷ்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *