
புதிய அமைச்சர்களின் சிறப்புரிமைகள் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தால் மக்களின் பிரச்சினைகள் இவருக்கு தெரிந்திருக்கும்.
ஆனால் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் 134 பேரின் வாக்குகளை பெற்றே ஜனாதிபதி ஆனார். எனவே இந்த 134 பேரின் தேவைகள் பூர்த்தி செய்யவே ஜனாதிபதி விரும்புகிறார்.
அமைச்சர்களுக்கான சம்பளத்தை பெறுவதில்லை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளத்தையே பெறுவதாக அமைச்சர்கள் கூறுகிறார்கள். ஆனால் இரண்டிற்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 9000 ரூபா மட்டுமே. அத்தோடு மற்ற அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்