திலீபனை நினைவுகூர வேலணை பிரதேச சபையில் ஈ.பி.டி.பி எதிர்ப்பு!(படங்கள் இணைப்பு)

இன்று நடைபெற்ற வேலணை பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் தியாக தீபம் திலீபனுக்கு நினைவஞ்சலி செலுத்தவேண்டுமென்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதிலும் ஆளும் கட்சியினரான ஈ.பி.டி.பி யினர் அக்கோரிக்கையினை நிராகரித்து சபையை ஒத்திவைத்திருந்தனர் .

ஆனாலும் சபை ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்களால் தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் உணர்பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது .

அதேதருணத்தில் வேலணை வங்களாவடிச்சந்தியில் பிரதேச சபைக்கு முன்பாக அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியில் தீவகம் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள் , உறவினர்கள் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் , வட மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் , ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் , யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் , யாழ் மாநகரசபை பிரதி முதல்வர் ஈசன் , வேலணை பிரதேச சபை உறுப்பினர்களான கருணாகரன் நாவலன் , செ. பார்த்தீபன் , தங்கராணி , யசோதினி , பிரகலாதன், சிறீபத்மராசா , வசந்தகுமாரன் , அசோக்குமார் , பிலிப் பிரான்சிஸ் , ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர்களான மடுத்தீன் பெனடிக்ற் ( சின்னமணி ) , கனகையா மற்றும் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் இணைப்பாளர்களான குயிலன் , கந்தசாமி உட்பட நூற்றுக்குமேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர் .

இந் நிகழ்வினையும் ஈ.பி.டி.பி கட்சி முற்றாக புறக்கணித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *