திலீபனுடன் இரண்டாம் நாள் – 16.07.1987

16.09.1987
அதி­காலை 5 மணிக்கே திலீ­பன் உறக்­கத்தை விட்டு எழுந்துவிட்­டார். முகம் கழு­வித் தலை­வா­ரிக் கொண்­டார். சிறு­நீர் கழித்­தார், ஆனால், மலம் இன்­னும் போக­வில்லை. அவர் முகம் சோர்­வா­கக் காணப்­பட்­டா­லும், அதைக் காட்­டிக்­கொள்­ளா­மல் எல்­லோ­ரு­டனும் சிரித்­துப் பேசிக்­கொண்­டி­ருந்­தார்.

சகல தின­ச­ரிப் பத்­தி­ரி­கை­க­ளை­யும் ஒன்­று­வி­டா­மல் படித்து முடித்­தார். பத்து மணி­ய­ள­வில் பக்­கத்து மேடை­யிலே நிகழ்ச்­சி­கள் ஆரம்­ப­மா­யின. நிகழ்ச்­சி­க­ளுக் குத் தேவர் தலை­மை­தாங்­கிக் கொண்­டி­ருந்­தார். கவி­தை­களை படிப்­ப­தற்­காக இளம் சந்­த­தி­யி­னர் முண்­டி­ய­டித்­துத் தம் பெயர்­க­ளைப் பதிவு செய்து கொண்­டி­ருந்­த­னர். “நிதர்­ச­னம்” ஒளி­ப­ரப்­பா­ளர்­க­ளின் வீடியோ கமெரா, நாலா­பக்­கங்­க­ளி­லும் சுழன்று படம் பிடித்­துக் கொண்­டி­ருந்­தது. மேடை­யில் கவி­தை­கள் முழங்கிக் கொண்­டி­ருந்­த­போது திலீ­பன் என் காதுக்­குள் குசு­கு­சுத்­தார்.

“நான் பேசப்­போ­கின்­றேன் மைக்கை வாங்­கித் தாருங்கோ வாஞ்­சி­யண்ணை…” “சாப்­பி­டா­மல் குடிக்­கா­மல் இருக்­கி­றீங்­கள், களைத்து விடு­வீங்­கள்…” என்று அவ­ரைத் தடுக்க முயன்­றேன். “இரண்டு நிமி­சம் மட்­டும் நிற்­பாட்டி விடு­வேன் பிளீஸ்… மைக்கை வாங்­கித் தாங்கோ …” என்று குரல் தள­த­ளக்­கக் கூறி­னார். அவ­ரைப் பார்க்­கப் பரி­தா­ப­மாக இருந்­தது. கண்­கள் குழி­வி­ழுந்து முகம் சோர்ந்து காணப்­பட்­டா­லும் அந்­தப் பசு­மை­யான சிரிப்பு மட்­டும் இன்­னும் மாறா­மல் அப்­ப­டியே இருந்­தது.

இரண்டு நிமி­டத்­துக்கு மேல் பேசக்­கூ­டாது என்ற நிபந்­த­னை­யு­டன் மேடை­யில் நின்ற தேவ­ரி­டம் மைக்­கைப் பெற்று கொடுக்­கி­றேன். திலீ­பன் பேசப்­போ­வதை தேவர் ஒலி­பெ­ருக்­கி­யில் அறி­வித்­த­தும் மக்­கள் கூட்­டம் மகிழ்ச்­சி­யால் துள்­ளிக் குதித்­தது. திலீ­பன் பேசு­கி­றார்…! “எனது அன்­பிற்­கும் மதிப்­பிற்குமு­ரிய மக்­கள் அனை­வ­ருக்­கும் எனது வணக்­கம். நின்­று­கொண்டு பேச­மு­டி­யாத நிலை­யில் இருப்­ப­தால் இருந்து பேசு­கின்­றேன்.

நாளை நான் சுய­நி­னை­வு­டன் இருப்­பேனோ? என்று தெரி­யாது. அத­னால் இன்று உங்­க­ளு­டன் பேச விரும்­பி­னேன். நாம் எமது இலட்­சி­யத்­தில் உறு­தி­யாக இருக்­கின்­றோம். 650 பேர் இன்­று­வரை மர­ணித்­துள்­ளோம். மில்­லர் இறு­தி­யா­கப் போகும்­போது என்­னி­டம் ஒரு­வரி கூறி­னான். நான் அவ­னு­டன் இறு­தி­வரை இருந்­தேன் “நான் எனது தாய்­நாட்­டிற்­காக உயிர்­து­றப்­பதை எண்­ணும்போது மகிழ்ச்­சி­யும் திருப்­தி­யும் அடை­கி­றேன். மக்­கள் விடு­தலை அடை­யும் காட்­சியை என் கண்­ணால் காண­மு­டி­யாது என்­பதே ஒரே ஏக்­கம்” என்று கூறி­விட்டு வெடி­ம­ருந்து நிரப்­பிய லொறியை எடுத்­துச் சென்­றான். இறந்த 650 பேரும் அநே­க­மாக எனக்­குத் தெரிந்­து­தான் மர­ணித்­தார்­கள். அதனை நான் மறக்­க­மாட்­டேன். உண்­ணா­வி­ர­தப் போராட்­டத்தை ஆரம்­பிக்­கத் தலை­வ­ரின் அனு­ம­தி­யைக் கேட்­டேன், அப்­போது தலை­வர் கூறிய வரி­கள் எனது நினை­வில் உள்­ளன. “திலீ­பன்! நீ முன்­னால் போ நான் பின்­னால் வரு­கி­றேன்” என்று அவர் கூறி­னார். அத்­த­கைய ஒரு தெளி­வான தலை­வனை, தனது உயி­ரைச் சிறிது கூட மதிக்­காத தலை­வனை நீங்­கள் பெற்­றி­ருக்­கி­றீர்­கள்.

அந்த மாபெ­ரும் வீர­னின் தலை­மை­யில் ஒரு மக்­கள் புரட்சி இங்கு வெடிக்­கும். அது நிச்­ச­யம் தமி­ழீ­ழத்தை, தமி­ழர்­க­ளின் அடிப்­படை உரி­மை­க­ளைப் பெற்­றுத் தரும். இதனை வானத்­தில் இருந்து பார்த்து மகிழ்­வேன். நான் மன­ரீ­தி­யாக, ஆத்­மார்த்­த­மாக எமது மக்­கள் விடு­தலை அடை­வார்­கள் என உணர்­கி­றேன். மகிழ்ச்­சி­யு­டன் பூரண திருப்­தி­யு­டன் உங்­க­ளி­ட­மி­ருந்து விடை­பெ­று­கி­றேன். விடு­த­லைப்­பு­லி­கள் உயி­ரி­லும் மேலாக சிறு­வர்­களை சகோ­த­ரி­களை, தாய்­மார்­களை, தந்­தை­யர்­களை நினைக்­கின் றார்­கள். உண்­மை­யான, உறு­தி­யான இலட்­சி­யம் அந்த இலட்­சி­யத்தை எமது தலை­வ­ரு­டன் சேர்ந்து நீங்­கள் அடை­யுங்­கள் எனது விருப்­ப­மும் இது­தான்” மிக­வும் ஆறு­த­லாக சோர்­வு­டன் ஆனால் திட­மா­கப் பேசிய அவ­ரின் பேச்­சைக் கேட்டு மக்­கள் கண்­ணீர் சிந்­தி­னர்.

அன்­றி­ரவு தலை­வர் வந்து திலீ­ப­னைப் பார்த்­தார். சோர்­வு­டன் படுத்­தி­ருந்த திலீ­ப­னின் தலையை அவர் தன் கரங்­க­ளால் வரு­டி­னார். ஒரு தகப்­ப­னின் அன்­பை­யும் தாயின் பாசத்­தை­யும் ஒன்­றா­கக் குழைத்­தது போன்­றி­ருந்­தது அந்த வரு­டல், இரண்டு இமய மலை­க­ளை­யும் என் கண்­கள் விழுங்­கிக்­கொண்­டி­ருந்­தன. இரவு 12 மணிக்குத் திலீ­பன் உறங்­கத் தொடங்­கி­னார். நானும் அவர் அரு­கி­லேயே படுத்­து­விட்­டேன்.

திலீ­ப­னின் வீட்­டிலே சில மாதங்­க­ளுக்­கு­முன் ஒரு நாய் செத்து விட்­ட­தால், அதை ஒரு மரத்­தின் கீழ் கிடங்கு வெட்டி தாட்­டி­ருந்­தார்­கள். திலீ­ப­னும் நண்­பர்­க­ளும் அந்­தக் கிடங்­கைக் கிண்டி நாயின் எலும்­புக் கூட்டை வெளி­யில் எடுத்­துத் துப்­பு­ரவு செய்­தார்­கள். அப்­போது ஏற்­பட்ட துர்­நாற்­றம் கார­ண­மாக வீட்­டில் இருந்­த­வர்­கள் வெளியே போனா­லும், திலீ­ப­னும் நண்­பர்­க­ளும் அதைப் பொருட்­ப­டுத்­தா­மல் தமது வேலையை முடித்­து­விட்டு அந்த எலும்­புக்­கூட்டை அன்றே எடுத்­துச் சென்று பொருட்­காட்­சி­யில் வைத்­த­னர். எதை­யும் ஆராய்ச்சி செய்து பார்ப்­ப­தில் திலீ­ப­னுக்கு மிகுந்த ஆர்­வம் உண்டு. அத­னால்­தான் இந்த உண்­ணா­வி­ர­தப் போராட்­டத்­தில் இறக்க நேரிட்­டால் தனது உடலை யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­பீ­டத்­துக்கு ஆராய்ச்­சிப் படிப்­புக்­காக அனுப்­பி­வைக்­கும்­படி அவர் கூறி­னார் போலும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *