
கொழும்பு, செப் 16
நாட்டின் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த 3 எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் எரிபொருள் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்
நாட்டை வந்தடைந்த 37 ஆயிரம் மெட்ரிக் தொன் 92 ரக பெற்றோல் மற்றும் ஒரு லட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெணை ஆகியவற்றை கப்பலில் இருந்து தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்