திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு யாழில் இருந்து தலயாத்திரை!

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருவாசக முற்றோதல் இடம்பெறவுள்ளது .

இதனையொட்டி யாழ்ப்பாணத்தில் இருந்து சிவனடியார்கள் திருகோணமலைக்குத் தலயாத்திரை செல்லவுள்ளனர்.

இதற்கென விசேட வாகன வசதி செய்யப்பட்டுள்ளது .

பாடல் பெற்ற திருக்கோணேஸ்வரர் சிவன் ஆலயத்தில் இடம்பெறும் திருவாசக முற்றோதலில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 077 786 6527 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும், இத் தலயாத்திரை நாளை சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் இணுவில் கந்த சுவாமி ஆலய முன்றலில் இருந்தும் மாலை 6.00 மணியளவில் நல்லூர் தூர்க்கா மணி மண்டப முன்றலில் இருந்தும் ஆரம்பமாகும் என்றும் தலயாத்திரை ஏற்பாட்டாளர் க.கு.க. சிவபாலன் அவர்கள் அறிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *