ஹட்டன் நகர சபைக்கு உரித்தான இடங்கள் குத்தகைக்கு!

எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு ஹட்டன் நகர சபை தற்காலிக வர்த்தக நிலையங்கள் அமைக்க நகரில் உள்ள நகர சபைக்கு உரித்தான இடங்கள் குத்தகைக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக கொவிட் 19 தொற்று காரணமாக தீபாவளி பண்டிகை வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இவ் வருடம் சிறப்பாக அமைய உள்ளது.

அதனை முன்னிட்டு ஹட்டன் நகரில் உள்ள நகர சபைக்கு உரித்தான இடங்கள் தற்காலிக வர்த்தக நிலையங்கள் அமைக்க குத்தகை அடிப்படையில் வழங்க உள்ளதாக நகர சபை தலைவர் சடையன் பாலசந்திரன் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வருடங்களாக ஹட்டன் நகரசபைக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது எனவும் இந்த வருடம் சிறப்பாக அமைய இந்த இடங்கள் தற்காலிக வர்த்தக நிலையங்கள் அமைக்க நகரில் உள்ள அனைத்து நகர சபை இடங்களில் தற்காலிக வர்த்தக நிலையங்கள் அமைக்க உள்ள நிலையில் விலை மனு கோரபடவுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *