மரக்கறி வாங்க வைத்திருந்த பணம் கொள்ளை!

கந்தப்பளை ஹைபொரஸ்ட் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஹைபொரஸ்ட் பிங்கந்தலாவ பகுதியில் திருட்டு சம்பவம் நேற்றுமுன்தினம் (15) மாலை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், தம்புள்ளை பகுதியிலிருந்து ஹைபொரஸ்ட் பிரதேசத்தில் மரக்கறி கொள்வனவு செய்ய வந்த லொறி ஒன்றில் வைத்திருந்த ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் திருடப்பட்டுள்ளதாக ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

அதாவது, தம்புளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு விற்பனைக்காக மரக்கறி வகைகளை கொள்வனவு செய்ய வர்த்தகர் ஒருவர் வழமைப்போல ஹைபொரஸ்ட் பகுதியிலுள்ள பிங்கந்தலாவைக்கு தனது லொறியில் பணத்துடன் வருகை தந்துள்ளார். இவர் பிரதான வீதியோரத்தில் லொறியை நிறுத்தி விட்டு விவசாயி ஒருவரின் மரக்கறி தோட்டத்திற்கு மரக்கறி கொள்வனவு செய்ய சென்றுள்ளார்.

இதன் போது தான் கொண்டு வந்த ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் பணத்தை லொறில் வைத்து விட்டு சென்றுள்ளார்.

பின்னர் வர்த்தகர் லொறிக்கு வந்து விவசாயிக்கு பணம் கொடுக்க பார்த்த போது அங்கு வைத்திருந்த பணத்தை காணவில்லை.

இதனையடுத்து, வர்த்தகர் தனது பணத்தை யாரோ திருடி சென்றுள்ளதை உணர்ந்து பின் ஹைபொரஸ்ட் பொலிஸ்நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

குறித்த, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை அரம்பித்துள்ளதுடன் இனந்தெரியாத நபர்கள் பணத்தை திருடியிருக்கக்கூடுமெனவும் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *