புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாலருடன் கலந்துரையாடல்!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தல் தொடர்பில் இலங்கைக;கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட அதிமேதகு போல் ஸ்டீபன்ஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இந்த சந்திப்பு இன்று (செப். 16) இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரை பாதுகாப்பு செயலாளர் வரவேற்றார்.

அவுஸ்திரேலிய உள்துறை மற்றும் சைபர் பாதுகாப்பு அமைச்சர் கிளேர் ஓ நீல் அன்மையில் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த வெற்றிகரமான விஜயத்திற்கு பங்களித்தமைக்காக இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சார்பில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இந்த சந்திப்பின் போது நன்றி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால ஒத்துழைப்பையும் இருதரப்பு உறவுகளையும் மேலும் மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் இந்த சந்திப்பின் போது சுமுகமாக கலந்துரையாடப்பட்டது.

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துதல், பயிற்சி வாய்ப்புகள் மற்றும் கூட்டு கடற்படை பயிற்சிகள் ஆகியவை தொடர்பில் இங்கு மேலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் இயன் கெய்ன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *